Kumar

Kumar

Friday, December 16, 2016

குறைகள் களைவார் குரு பகவான் : போரூர் நவகிரகங்களில், குரு தனிச்சிறப்பு மிக்கவர். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்று அழைப்பர். குரு என்றால் இருட்டை நீக்குபவர் என்று பொருள். கல்வி, கலை, ஆராய்ச்சி, திருமணம், ஆன்மிகம், மரபு சார்ந்த விஷயங்கள், அமைதி, கௌரவப் பதவி, ஒழுக்கம் முதலியவற்றை குருபகவான்தான் அருளுகிறார். ஜாதகத்தில் குரு சரியாக அமையாதோர் போரூர் ராமநாதீஸ்வரர் தலத்திற்கு வந்தால், நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்வர். ராமர், ஈசனை ராமநாதர் எனும் திருப்பெயரிலேயே தரிசித்த தலம்தான் போரூர். ராமபிரான் இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இத்தலம் போரூர் என்றானது. ராமபிரானுக்கு குருவாக போரூர் ஈசன் விளங்கியதால் இத்தலம் குருத் தலமாக போற்றப்படுகிறது. குருபகவானுக்குரிய பூஜைகள் யாவும் இந்த ராமநாதருக்கு செய்யப்படுகின்றன. ராமேஸ்வரம் போலவே இங்கும் விபூதியுடன் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் மணக்கும் தீர்த்தமும் பிரசாதமாகக் கிடைக்கிறது; பக்தர் தலையில் சடாரி சாத்துவதும் உண்டு. இத்தலம் உத்தர ராமேஸ்வரம் என போற்றப்படுகிறது. ராமேஸ்வரத்திற்கு பிரார்த்தனை செய்து அங்கு சென்று பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள் இங்கு பிரார்த்தனையை செலுத்துகின்றனர். அம்பிகை சிவகாம சுந்தரி தனிக்கோயில் கொண்டுள்ளாள். ஈசன் கருவறை முன் உள்ள மகாமண்டபம் நான்கு புறமும் யாளிகள் தாங்க, 20 தூண்களுடன் திகழ்கிறது. ராமபிரானின் திருவடிகளை இத்தலத்தில் தரிசிக்கலாம். இத்தல திருக்கல்யாண சேவையை தரிசிப்பவர்களுக்கு ஈசன் அருளால் திருமண பாக்யம் உடனே கிட்டுகிறது. பிரிந்திருந்த தம்பதியர் இத்தல ஈசனை தரிசிக்க அவர்கள் ஒன்று சேர்கிறார்கள். குருபகவான் தலமாதலால் குருதசை, குருபுக்தி, லக்னத்தில் குரு, குருதோஷம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 11 வாரம் இத்தல ஈசனுக்கு நெய் விளக்கேற்றி, கடலை சுண்டல், தயிர் சாதம் நிவேதித்தால் பிரச்னைகள் காணாமல் போய்விடுகின்றன. ராஜகோபுரம் கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது கிடைத்த கல்வெட்டு மூலம் இத்தலம் ராஜேந்திரசோழன் காலத்தில் திருப்பெருங்கோயில் என வழங்கப்பட்டதும் சோழ மன்னர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்துள்ளதும் தெரியவந்தது.

No comments:

Post a Comment