Kumar

Kumar

Friday, December 16, 2016

புலிப்பாணி ஜோதிடம் 300 (Pulippaani Astrology 300) புலிப்பாணி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் பழனி மலையில் ஜீவ சமாதியான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் (புலி + பாணி) இப்பெயர் பெற்றார். இவரால் வைத்தியம் 500, சாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூசா விதி 50, சண்முக பூசை 30, சிமிழ் வித்தை 25, சூத்திர ஞானம் 12 மற்றும் சூத்திரம் 90 எனப் பல நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன. ஒரு மனிதன் பிறக்கும் போது வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குண நலன்கள் மற்றும் வாழ்க்கைப் பாதையைக் கடக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றினைத் துல்லியமாக தனது ஞான திருஷ்டியின் மூலம் தெரிந்து கணக்கீடாக கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர். இத்தகைய ஜோதிட சாஸ்திர நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் ”புலிப்பாணி ஜோதிடம் 300” என்னும் நூலாகும். இதில் உள்ள 300 பாடல்களும் மனித வாழ்வில் சரியாக பொருந்தி வருகிறது. இதன் மூலமாக ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும். இந்த நூலைப் படிப்பதற்க்கு முன்பாக ஜோதிட விதிகள் சற்று தெரிந்திருந்தால் இதிலுள்ள பாடல்கள் தெளிவாக விளங்கும். பாடல் 1 - கடவுள் வாழ்த்து பாடல் 2 - சக்தி வழிபாடு பாடல் 3 - சூரியனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் பாடல் 4 - சந்திரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் பாடல் 5 - செவ்வாயின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் பாடல் 6 - புதனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் பாடல் 7 - வியாழனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் பாடல் 8 - சுக்கிரனின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் பாடல் 9 - சனியின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் பாடல் 10 - ராகு, கேதுவின் ஆட்சி, உச்ச, நீச்ச, நட்பு மற்றும் பகை வீடுகள் பாடல் 11 - முதற் பாவம் பாடல் 12 - இரண்டாம் பாவம் பாடல் 13 - மூன்றாம் பாவம் பாடல் 14 - நான்காம், ஐந்தாம் பாவம் பாடல் 15 - ஆறாம் பாவம் பாடல் 16 - ஏழாம் பாவம் பாடல் 17 - எட்டாம் பாவம் பாடல் 18 - ஒன்பதாம் பாவம் பாடல் 19 - பத்தாம் பாவம் பாடல் 20 - பதினோராம் பாவம் பாடல் 21 - பன்னிரண்டாம் பாவம் பாடல் 22 - பாடல் 23 - மேஷ இலக்கின ஜாதகர் பாடல் 24 - ரிஷபம், மிதுன இலக்கின ஜாதகர் பாடல் 25 - கடக இலக்கின ஜாதகர் பாடல் 26 - சிம்ம இலக்கின ஜாதகர் பாடல் 27 - கன்னி இலக்கின ஜாதகர் பாடல் 28 - துலாம் இலக்கின ஜாதகர் பாடல் 29 - விருச்சிக இலக்கின ஜாதகர் பாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர் பாடல் 31 - மகர இலக்கின ஜாதகர் பாடல் 32 - கும்ப இலக்கின ஜாதகர் பாடல் 33 - மீன இலக்கின ஜாதகர் பாடல் 34 - இலக்கினத்தில் மாந்தி என்றும் குளிகன் பாடல் 35 - மூன்றாமிடத்தில் மாந்தி என்றும் குளிகன் பாடல் 36 - ஐந்தாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் பாடல் 37 - ஏழாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் பாடல் 38 - ஒன்பதாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் பாடல் 39 - பதினொன்றாம் இடத்தில் மாந்தி என்றும் குளிகன் பாடல் 40 - சூரியன் 3,6,10,11 ல் தரும் யோகம் பாடல் 41 - சூரியன் 2, 3, 4, 7, 5 ல் தரும் பாதகம் பாடல் 42 - சந்திரன் 1,4,7,10, 1,5,9 ல் தரும் யோகம் பாடல் 43 - சந்திரன் 3,7,5,11 ல் தரும் யோகம் பாடல் 44 - செவ்வாய் 1,10,2,11,6 ல் தரும் யோகம் பாடல் 45 - செவ்வாய் 6,8,12,3,7,10,9 ல் தரும் பாதகம் பாடல் 46 - வியாழன் 4,7,10,1,5,9,2,11 ல் தரும் யோகம் பாடல் 47 - வியாழன் 8 ல் தரும் பாதகம் பாடல் 48 - சுக்கிரன் 1,4,7,10,5,9 ல் தரும் யோகம் பாடல் 49 - சுக்கிரன் 12,3,6,8 ல் தரும் பாதகம் பாடல் 50 - சனி 9,6,11,3,10 ல் தரும் யோகம்

No comments:

Post a Comment