Kumar

Kumar

Friday, December 16, 2016

கேடுகள் நீக்குவார் கேது பகவான் : கெருகம்பாக்கம் வகிரகங்களில் கேதுவை ஞானகாரகன் என்பர். தெளிவற்ற, நிம்மதியற்ற, எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள் கேதுவின் அருளால் சட்ெடன்று ஞானப்பாதைக்குத் திரும்புவார்கள். கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்த காரியத்தையும் அலைச்சலுடன்தான் முடிப்பர். கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிப்பதால் ேகதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும். இங்கு கேது பகவானை தனிச் சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணைந்த நிலையில், நடுவில் காளிங்க நர்த்தன கண்ணன் வடிவில் இவர் அருள்பாலிக்கிறார். எமகண்ட வேளை கேதுவிற்கு உரியது என்பதால், இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்ட வேளை பூஜைகள் விசேஷம். கோயிலில் முதல் தரிசனம் தருகிறார் ஆதிகாமாட்சி. கருவறையில் ஈசன், நீலகண்டேஸ்வரராக அருள்கிறார். அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, வலி தாங்காமல் வாசுகி நஞ்சைக் கக்கியது. பாற்கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. இரண்டும் சேர்ந்து ஆலாலம் எனும் கொடிய விஷமாக மாறின. யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த நஞ்சை சட்டென விழுங்கினார் ஈசன். அதைக்கண்டு பதைபதைத்த பார்வதி அந்த நஞ்சு தொண்டையை விட்டுக் கீழே இறங்காதபடி அதை ஈசனின் கண்டத்திலேயே நிறுத்தினான். ஈசன் நீலகண்டேஸ்வரர் ஆனார். ஈசனுக்கும், நந்திக்கும் இடையே உள்ள மேல்விதானத்தில் சூரியனை கேது விழுங்குவதுபோல் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன் குறைவதாக ஐதீகம். நவகிரக நாயகர்களின் சந்நதியின் மேல் விதானத்திலும் சூரியனை கேது விழுங்கும்சிற்பம் உள்ளது.

1 comment:

  1. SEGA GENESIS TV Commercial "E/U" (VIDEO) - Videodl.cc
    YouTube is famous for its high quality, original music, as well as the latest addition to the youtube convert to mp3 16-bit console lineup, SEGA GENESIS!

    ReplyDelete