Kumar

Kumar

Friday, December 16, 2016

12 இலக்கினப் பொதுப் பலன்கள்    லக்னமே வாழ்க்கை லக்னாதிபதி எந்த வீட்டில் இருந்தால் என்ன பலன்? நாம் நட்சத்திரங்களையும் ராசிகளையும் அறிவோம். ‘‘உங்களின் ராசி என்ன?’’ என்று கேட்டால் எல்லோரும் சட்டென்று சொல்லி விடுவோம். ஆனால், ‘‘உங்களின் லக்னம் என்ன?’’ என்று கேட்டால் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ஜோதிடர் ராசிக் கட்டத்தை நோக்கும்போது லக்னம் என்ன என்றுதான் பார்ப்பார். ஜாதகக் கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்தான் அது. உங்களின் மையச் சக்தி குவிந்திருக்கும் ராசியையே லக்னம் என்று வரையறுத்திருக்கிறார்கள். இந்த உலகத்தை நீங்கள் எந்த ராசியின் வழியாக, அதன் அதிபதியான எந்த கிரகத்தின் மூலம் சந்திக்கிறீர்கள் என்பதைத்தான் லக்னம் என்கிறார்கள். ராசி என்பது, சந்திரன் எந்த கிரக வீட்டில் இருந்தபோது நீங்கள் பிறந்தீர்கள் என்று சொல்வது. ஆனால், லக்னம் என்பது நீங்கள் எந்த மையத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்க்கையை எந்த மையம் நகர்த்துகிறது என்றும் தீர்மானிக்கிறது. மரத்தின் ஆணிவேர் போல மனிதனுக்கு லக்னம். உடலுக்கு உயிர்போல என்பதாலேயே, விதியாகிய லக்னம் மதியாகிய சந்திரன் கதியாகிய சூரியன் என்பார்கள். ஏனெனில், ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பதே லக்னம்தான். ஜாதகத் தின் பிராண மையமே லக்னம்தான். ராசியை வைத்து பலன்களை சொல்லுவதை விட லக்னத்தை வைத்துத்தான் முழுமையான பலன்களை கூற முடியும். வாழ்க்கைக் கணக்குகளை தொடங்கும் இடமும் இதுதான். ராசிக் கட்டங்களில் ஆங்காங்கு கிடக்கிற கிரகங்களின் பலம், பலவீனங்களை, திறனை லக்னம்தான் தீர்மானிக்கிறது. எனவே, எந்தெந்த லக்னக்காரர்கள் எந்தெந்த கோயில்களுக்குச் சென்றால் பூரண நற்பலன்களை அடைவார்கள் என்பது கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது. அந்தந்த கோயில்களுக்குச் சென்று தரிசித்து பயனடையுங்கள்.

No comments:

Post a Comment