Kumar

Kumar

Friday, December 16, 2016

குபேர யோகம் தரும் சுக்கிர பகவான் : மாங்காடு சுக்கிரனுடைய அருட்பார்வை குடிசைவாசியையும் குபேரனாக்கும். ஆயகலைகளுக்கும் அதிபதி சுக்கிரன். கலைத்துறையில் வெற்றி பெற இவர் அருள் வேண்டும். அழகு, வசீகரம், செல்வவளம் அருள்வதில் நிகரற்றவர். இந்த சுக்கிரனுக்கு அதிபதியாக இருந்த சுக்கிராச்சாரியார் வழிபட்ட தலமே மாங்காடு வெள்ளீஸ் வரர் கோயில். திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாக கேட்டதும், குரு சுக்கிராச்சாரியார், மன்னனைத் தடுக்க முயற்சித்து முடியாததால் தானே வண்டாக உருவெடுத்து நீர் வார்க்கும் கெண்டியின் வாயை அடைத்துக் கொண்டதும், வாமனனான திருமால் ஒரு தர்ப்பைப் புல்லால் அந்த வாயைக் குத்த, உள்ளே வண்டுருவில் இருந்த சுக்கிராச்சாரியார் பார்வையிழந்தார். மூன்றடி மண்கேட்ட திருமால் மூவுலகையும் அளந்தார். இதற்குப் பிறகு தன் பார்வை மீள, திருமாலை பிரார்த்தித்துக் கொண்டார் சுக்கிராச்சாரியார். பெருமாளும், ‘‘மாங்காடு தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் தவமிருக்கும் பார்வதிதேவிக்கு தரிசனம் கொடுக்க ஈசன் அங்கு வருவார்; அப்போது அவரை தரிசித்து இழந்த பார்வையை பெறுவாய்’’ என்று அருளினார். அதன்படியே சுக்கிராச்சாரியார் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அனுதினமும் பூஜிக்க, பார்வதிதேவியை மணம் புரிய அங்கே தோன்றிய ஈசன், சுக்கிராச்சாரியாருக்கும் அருளி அவர் பார்வையை மீட்டுக் கொடுத்தார். சுக்கிராச்சாரியார் பூஜித்ததால் இறைவனை தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும் சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைத்தனர். பார்வை குறைபாடுள்ளோர், ஏன், பார்வை இழந்தவரும்கூட வெள்ளீஸ்வரரை அகக்கண்களால் தரிசித்து, மீண்டும் வந்து புறக்கண்களால் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெறுகின்றனர்! ஐந்து வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் நட்சத்திர நாட்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன.

No comments:

Post a Comment