Kumar

Kumar

Friday, December 16, 2016

இராஜ யோகம்                                                        1. இராஜ யோகம் : கிரகங்கள் கூட்டு யோகமாகும் .யோகம் என்பது சுப/அசுப பலன்களைத் தர வல்லது .ஒருவன் பிச்சை எடுப்பதிற்கு ஒரு யோகம் (கிரக கூட்டு) வேண்டும் . இதுவும் ஒரு வகை யோகமே . இராஜ யோகம் என்பது சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்துவது ,அனுபவிப்பது ,பணப்புழக்கம் அதிகம் இருப்பது ,உயர் நிலையில் இருப்பது மேலும் கலெக்டர் ,பெரிய வர்த்தகம் செய்பவர் ,டாக்டர் ,எஞ்சினியர் ,உலகமறிந்த விளையாட்டு வீரர் ,விரும்பப்படுகிற சினிமா நடிகர் / நடிகை ,மதத் தலைவர் போன்றவர்களுக்கு எல்லாம் சுப பலனை தரக்கூடிய கிரக கூட்டு இருப்பதே காரணம் . இராஜ யோகங்களை தரக்கூடிய சில கிரக கூட்டுகள் பற்றி காண்போம் . 1. 5,9 ம் வீட்டு அதிபதிகளுடன் 1,4,7,10 ம் வீட்டு அதிபதிகள் சொந்த வீட்டில் அமர்வது சுப யோகம் ஆகும் . அது மேலும் லக்னமாகி சூரியன் ,சந்திரன் சேர்ந்து தங்களது சொந்த வீட்டில் அமர்வது அல்லது இருவரும் 1,4,5,9,10 ல் அமர்வது இராஜயோகம் ஆகும் .இந்த அமைவு பெற்று ஜாதகர்க்கு இராஜயோகத்துடன் இருப்பார் . 2. ரிஷபம் லக்னமாகி 9,10 ம் ஆதியாகிய சனி 5 ம் வீட்டதிபதி புதனோடு கேந்திரத்திலே ,திரிகோணத்திலே இருப்பது . 3. மிதுனம் லக்னமாகி 1,4 க்குடைய புதன் 10 ம் ஆதி குரு அல்லது 5 ம் ஆதி சுக்கிரனோடு இணைவது . 4. கடகம் லக்னமாகி சந்திரன் 5,10 ம் ஆதி செவ்வாயோடு 11,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . 5. சிம்மம் லக்னமாகி சூரியன் 4,9 ம் ஆதி செவ்வாயோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . 6. கன்னி லக்னமாகி 1,10 ம் ஆதி புதன் , 4,7 க்குரிய குரு அல்லது 2 , 9 க்குரிய சுக்கிரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . மேலும் புதன் ,சுக்கிரன் 3 ல் இணைந்து 9 ம் வீட்டைப் பார்ப்பதும் இராஜயோகமாகும். 7. துலாம் லக்னமாகி 4, 5 க்குடைய சனி, 2 ,7 க்குரிய செவ்வாய் அல்லது 9 க்குரிய புதன் அல்லது 10 க்குரிய சந்திரனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . 8. விருச்சகம் லக்னமாகி 5 க்குரிய சந்திரன் அல்லது 10 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . 9. தனுசு லக்னமாகி 1 ,4 க்குரிய குரு 5 க்குரிய செவ்வாய் அல்லது 10 க்குரிய புதன் அல்லது 9 க்குரிய சூரியனோடு 1,5,9 அல்லது 1,4,7,10 ல் இணைவது . 10. மகரம் லக்னமாகி சனி 5,10 க்குரிய சுக்கிரனோடு இணைவது . 11. கும்பம் லக்னமாகி சனி 4,9 க்குரிய சுக்கிரனோடு இணைவது . 12. மீனம் லக்னமாகி 1,10 க்குரிய குரு 4,7 க்குரிய புதனோடு அல்லது 9 க்குரிய செவ்வாயோடு இணைவது மேலும் 4 வகையான இராஜயோகம் கிழ்க்கண்ட வழிவகைகளில் உருவாகிறது 1. 1,5,9 ம் ஆதிகள் இணைவது 2. 2,6,10 ம் ஆதிகள் இணைவது 3. 3,7,11 ம் ஆதிகள் இணைவது 4. 4,8,12 ம் ஆதிகள் இணைவது 1, 5, 9 : 1. இந்த வகை இணைவு ஜாதகரை சமுதாயத்தில் பெரிய மனிதராகவும் தலைவராகவும் அல்லது விஞ்ஞானி ,மகான் நிலைக்கு கொண்டு செல்லும் . 2, 6,10: 2. இவர்கள் வெளிநாடு சென்று அதிக வருவாய் ஈட்டும் நிலைக்குக் கொண்டு செல்லும் .இவர்கள் குடும்பமே பெரிய வர்த்தகர்களாகவும் ,அரசாங்கத்தால் மதிக்கப்படுபவராகவும் இருப்பார்கள் . 3, 6,11: 3. மிகவும் தைரியசாலிகளாகவும் தன் உழைப்பால் முன்னேறுபவர்களாகவும் இருப்பார்கள் . 4, 8,12: 4. இவர்கள் மறைமுக நடவடிக்கை மூலம் பொருள் ஈட்டுபவர்களாகவும்,கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவர்களாகவும் சொத்தின் மேல் பற்றுடையவர்களாகவும் இருப்பார்கள் . 2. கால சர்ப்ப யோகம் . ராகு,கேதுகளுக்கும் இடையில் அனைத்து கிரகங்களும் அமைவது .பெரும்பாலான ஜோதிடர்கள் இந்த அமைவு கெடு பலனைத் தரும் என்று கூறுகிறார்கள் .ஆனால் இது அப்படியல்ல .இவ்வமைப்பு உள்ளவர்கள் இயற்கையிலேயே தைரியசாலிகளாகவும் ,தன்னை வெளிக்கொணர்வதில் ,நிலை நாட்டுவதில் குறிக்கோள் உடையவர்களாகவும் ,மிக விரைவில் பிரபலம் அடைபவர்களாகவும் இருப்பவர்கள் .குறிப்பாக 10 ம் அதிபதி ரகுவுடன் தொடர்பு அல்லது ராகு 3 அல்லது 5 ல் அமைவது இத்தகைய யோகத்தைத் கண்டிப்பாக கொடுக்கும் . 3. திருமணப் பொருத்ததில் சில நுணுக்கங்கள் . ஒரு ஆணின் ஜாதகமும் ,பல பெண்களின் ஜாதகமும் ஒரே நேரத்தில் பொருத்தம் பார்க்க வந்தால் எப்படிப் பொருத்தம் பார்ப்பது ? 1. ஆணின் ஜாதகத்தில் 10 மிடம் அல்லது 10 ம் அதிபதி அமர்ந்த இராசி எதுவோ அதுவே அவர் மனைவின் ராசியாகும் . உதாரணமாக ஒரு சிம்ம லக்னம் ஆணிற்கு 10 மிடம் ரிஷபம் .அந்த சுக்கிரன் கடகத்தில் .இந்த அமைப்பில் உள்ள ஒரு வரனுக்கு 50 பெண்களின் ஜாதகம் பொருத்தம் பார்க்க வருமானால் அந்த 50 ஜாதகங்களில் ரிஷபம்,கடகம் ,துலாம் இந்த ராசியுடைய பெண்களின் ஜாதகம் மட்டும் எடுத்து பொருத்தம் பார்ப்பது நலம் . 2. மற்றொரு வகை .வரணின் ஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி அல்லது அந்த ராகுக்கு இடம் கொடுத்தவர் அமர்ந்த ராசி எதுவோ அது பெண்ணின் ராசியாக இருக்கும் . 3. ஆணின் ஜாதகத்தில் உள்ள ராகு ,கேதுகளுக்கு ,1,5,9, ல் பெண்ணின் ராகு ,கேதுவோ அல்லது கேது,ராகுவோ அமைந்து இருக்கும் ஜாதகம் பொருந்தும் .

No comments:

Post a Comment