Kumar

Kumar

Friday, December 16, 2016

வீடுகளிலும் கடைகளிலும் அர்ஜுனனுக்காக கிருஷ்ண பகவான் தேரோட்டும் படத்தை வைக்கக்கூடாது என சிலர் கூறுகிறார்களே? சாியா?                                                         மனிதப் பிறவியே இறைவனோடு இரண்டற கலக்கவே ஏற்பட்டதாகும். அந்த முழுமுதற் கடவுளான ஸ்ரீகிருஷ்ணர் நம்முடைய உள்ளத்தில் உறைகிறார். பாரதப்போர் துவங்கும்போது உறவினர்களை அழிக்கத் தயங்கிய அர்ஜுனனுக்கு அரிய பெரிய வேதாந்த கருத்துகளை ஸ்ரீபகவத் கீதை என்று வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்தை மாட்டினால் துறவறம் கிடைத்து விடுமோ என்று பயப்பட வேண்டாம். துறவும், ஞானமும் நம் கைகளில் இல்லை. இந்தப் படம் வாழ்க்கை, ஆன்மிகம் என்று சகல விஷயங்களைப் பற்றியும் கிருஷ்ணன் அர்ஜுனனிடம் பேசுவதாக உள்ளது. ஆகையால், இந்தப் படத்தை எங்கு வேண்டுமானாலும் மாட்டலாம். இந்தப் படத்தை ஒரு ஜென்மம் முழுவதும் பார்த்தாலே அது தியானமாகி ஞான பரியந்தம்வரை கொண்டுபோய் சேர்க்கும்.

No comments:

Post a Comment